இன்றைய முக்கிய செய்திகள் ஐரோப்பா செய்தி

ஏவுகணை சேதப் படங்கள் பகிர்ந்தால் சிறை – பிரித்தானியர்களுக்கு கடும் எச்சரிக்கை

ஏவுகணை தாக்குதல் அல்லது பிற சம்பவங்களால் ஏற்பட்ட சேதங்களின் படங்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்தால் அபராதம், சிறைத்தண்டனை அல்லது நாடுகடத்தல் போன்ற தண்டனைகள் விதிக்கப்படலாம் என பிரித்தானிய தூதரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள பிரித்தானிய தூதரகம் இந்த அறிவிப்பை தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது.

சம்பவ இடங்கள், ஏவுகணை தாக்குதலால் ஏற்பட்ட சேதங்கள், அரச கட்டிடங்கள் மற்றும் இராஜதந்திர அலுவலகங்களின் புகைப்படங்களை எடுத்து பகிர வேண்டாம் என அதிகாரிகள் எச்சரித்துள்ளதாக தெரிவித்துள்ளது.

மேலும், அங்கு வசிக்கும் அல்லது பயணம் செய்யும் பிரித்தானிய குடிமக்கள் ஐக்கிய அரபு அமீரகத்தின் சட்டங்களுக்கு உட்பட்டவர்கள் என்றும், அந்த விதிகளை மீறினால் அபராதம், சிறைத்தண்டனை அல்லது நாடுகடத்தல் போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படலாம் என்றும் தூதரகம் குறிப்பிட்டுள்ளது.

இதனிடையே, நகரத்தின் மீது பாய்ந்ததாகக் கூறப்படும் ஈரானிய ஏவுகணைகளை வீடியோவாக பதிவு செய்ததாக சந்தேகிக்கப்படும் 60 வயது பிரித்தானிய நபர் மீது சைபர் குற்றச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக நேற்றை செய்தி வெளியிட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது

Sainth

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!