பிரித்தானிய விமானப் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு – நீடிக்கும் கட்டுப்பாடு
பிரித்தானிய விமானப் பயணிகள் கைப் பொதிகளில் திரவங்களை எடுத்துச் செல்வது தொடர்பான சட்டத்தில் திட்டமிடப்பட்ட தளர்வை மேற்கொள்ளும் நடவடிக்கை ஒரு வருடம் தாமதமாகியுள்ளது.
புதிய ஸ்கேனிங் தொழில்நுட்பத்தை நிறுவ விமான நிலையங்களுக்கு ஓராண்டு நீட்டிப்பு வழங்கப்பட்ட நிலையில் பிரித்தானிய பயணிகள் பழைய பொதி சட்டங்களுக்கு இணங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
இதுவரையில் 100 மில்லி லிட்டர் அளவுகொண்ட திரவத்தைத்தான் எடுத்துச்செல்ல முடியும் என்ற வரம்பு நீக்கப்படவிருந்த நிலையில் தொடர்ந்து அதனை நீடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியா முழுவதிலும் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் மாற்றங்களை வழங்குவதற்கான ஆரம்ப காலக்கெடு 2024ஆம் ஆண்டு ஜூன் மாதம் என நிர்ணயிக்கப்பட்டது.
இது கோடை காலத்தில் 100 மில்லி லீற்றர் திரவ கட்டுப்பாட்டில் இருந்து பயணிகளை விடுவிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
எனினும் 100 மில்லி லீற்றர் திரவ வரம்பை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக ஸ்கேனர்களை நிறுவுவதற்கான சமீபத்திய திகதியைத் தவறவிட முக்கிய விமான நிலையங்கள் அரசாங்கத்தால் அனுமதிக்கப்படும்.
லண்டன் கேட்விக், ஹீத்ரோ மற்றும் மான்செஸ்டர் விமான நிலையங்கள் ஜூன் மாதம் முதலாம் திகதி வரையில் தொழில்நுட்பம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படவில்லை. இந்த தாமதம் ஒரு வருடம் வரை நீடிக்கும்.
புதிய ஸ்கேனர்கள் பயணிகளின் கைப் பொதிகளில் உள்ள தடை செய்யப்பட்ட பொருட்களை எளிதில் கண்டறிந்து விமான பயணத்தை பாதுகாப்பானதாக மாற்றும்.
தற்போது ஸ்கேனர்கள் தயாரித்த 2டி படங்களுக்கு மாறாக, விமான நிலைய ஊழியர்களுக்கு பைகளின் உள்ளடக்கங்களின் 3டி படத்தை வழங்குவதன் மூலம் இதைச் செய்கிறது.