பிரித்தானிய தொலைக்காட்சி தொகுப்பாளரின் உடல் கிரீஸ் தீவில் மீட்பு

கிரீஸ் தீவான சிமியில் கடந்த புதன்கிழமை முதல் காணாமல் போனதாக கூறப்பட்ட பிரித்தானிய தொலைக்காட்சி ஒன்றின் தொகுப்பாளர் மைக்கேல் மோஸ்லி சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
சிமி தீவில் உள்ள தி அபிஸ் என்று உள்ளூர் மக்களால் அறியப்படும் ஒரு ஆபத்தான குகை வளாகத்திற்கு அருகிலேயே ஒரு குடையுடன் இந்த உடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஐந்து நாட்களாக அவரை தேடும் பணி தொடரப்பட்ட நிலையில், கடற்கரையிலிருந்து பெடிக்கு செல்லும் பாறைப் பாதையில் அவர் நடந்து சென்றபோது, உயரத்திலிருந்து வீழ்ந்திருக்கலாம் எனவும் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
(Visited 14 times, 1 visits today)