பெரும் படை சூழ சீனா செல்லும் பிரித்தானிய பிரதமர்!! உறவை வளர்க்க புதிய முயற்சி!
பிரித்தானிய பிரதமர் சர் கெய்ர் ஸ்டார்மர் (Sir Keir Starmer) தலைமையிலான குழு, இன்று சீனாவிற்கு உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொள்ளவுள்ளது.
சீனாவுடனான இங்கிலாந்தின் உறவை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டே மேற்படி விஜயம் முன்னெடுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது “பொற்காலத்திலிருந்து பனி யுகத்திற்கு திரும்புவதற்கு ஒப்பானது என விமர்சிக்கப்பட்டுள்ளது.
குறித்த விஜயத்தின்போது பாதுகாப்பு, சைபர் ஊடுறுவல் குற்றங்கள், கலாச்சாரம், பொருளாதாரம் உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து ஆராயப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் கடந்த 2018 ஆம் ஆண்டிற்கு பிறகு பிரித்தானிய பிரதமர் ஒருவர் சீனாவிற்கு பயணம் செய்வது இதுவே முதல் முறையாகும்.





