Brexit கடவுச்சீட்டு விதி – பிரித்தானிய பயணிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி
Brexit கடவுச்சீட்டு விதியின் கீழ் உள்ள கடவுச்சீட்டில் பயணிக்க முயன்ற தம்பதி உள்ளிட்ட பாரிய அளவிலான மக்கள் விமான நிலையத்தில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.
தமது ஐரோப்பிய ஒன்றிய பயணத் திட்டங்கள் பாழாகிவிட்டதாகவும் தாம் ஏமாற்றமடைந்துவிட்டதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
2018 ஆம் ஆண்டு வரை, இங்கிலாந்து பயணிகள் பழைய கடவுச்சீட்டில் இருந்து ஒன்பது மாதங்கள் வரையான காலப்பகுதியில் புதிய கடவுச்சீட்டிற்கு மாற்ற முடியும்.
ஆனால் பிரெக்சிட்டிற்குப் பிறகு, ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் 10 ஆண்டுகளுக்கு மேல் உள்ள கடவுச்சீட்டுகளை ஏற்காது.
மாற்றத்தை அறியாதவர்கள் கடவுச்சீட்டு கட்டுப்பாட்டின் மூலம் திருப்பி அனுப்பப்பட்டனர்.
சிலரால் பயணங்களை மறுபதிவு செய்ய முடிந்தது, ஆனால் எவருக்கும் திருப்பிச் செலுத்தப்படவில்லை.
லண்டனை சேர்ந்த ஜேன் ஓபர் என்ற 61 வயதான பெண் பெப்ரவரி மாதம் ஒன்லைனில் யில் பார்சிலோனாவிற்கு தானும் தனது கணவனும் பயணிப்பதற்காக விண்ணப்பம் செய்த போதிலும் அவர்களால் விமானத்தில் ஏற முடியவில்லை என்று கூறப்பட்டதால் அதிர்ச்சியடைந்ததாக குறிப்பிட்டுள்ளார்.
தாங்கள் விமானத்திற்கு செல்ல முடியாமல் போனதுடன் ஒரு குற்றவாளியைப் போல விமான நிலையத்தின் வழியாகத் திரும்பிச் செல்ல வேண்டியது மிகவும் மன அழுத்தமாகவும் அவமானமாகவும் இருந்தது என ஜேன் ஓபர் தெரிவித்துள்ளார்.
ஜேன், பார்சிலோனாவில் வசிக்கும் தனது நண்பர்களைப் பார்ப்பதற்காகப் பயணம் செய்து கொண்டிருந்தார், தனது துணையுடன் பயணத்தை மறுசீரமைக்க வேண்டியிருந்ததால், நூற்றுக்கணக்கான பவுண்டுகள் செலவு செய்ய நேரிட்டுள்ளது.
கடைசி நிமிட மாற்று விமானங்கள் மற்றும் வேகமாக கண்காணிக்கப்பட்ட கடவுச்சீட்டிற்காக சுமார் 400 பவுண்ட் செலவிட்ட போதிலும் பயணிக்க முடியாமல் போயுள்ளது.
இதேபோன்று பாரிய அளவிலானோர் ஆயிர கணக்கான பவுண்ட்களை செலவிட்ட போதிலும் பயணிக்க முடியாமல் கடும் நெருக்கடிக்குள்ளாகியுள்ளனர்.