வங்கதேசத்தில் இந்துக்கள் மீதான தாக்குதல் – பிரிட்டிஷ் பாராளுமன்ற உறுப்பினர் கண்டனம்
பிரித்தானிய(British) பாராளுமன்ற உறுப்பினரும் வெளியுறவு, காமன்வெல்த் மற்றும் மேம்பாட்டு விவகாரங்களுக்கான நிழல் வெளியுறவுச் செயலாளருமான பிரிதி படேல்(Priti Patel), வங்கதேசத்தின்(Bangladesh) நிலைமை கவலைக்குரியது என்று குறிப்பிட்டுள்ளார்.
வங்கதேசத்தில் மத சுதந்திரம் பாதுகாக்கப்பட்டு, இந்துக்கள் பாதுகாப்பாக இருக்கும் எதிர்காலத்தை ஏற்படுத்த பிரித்தானிய அரசாங்கம் தனது செல்வாக்கையும் அதிகாரங்களையும் பயன்படுத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், “வங்காளதேசத்தில் அதிகரித்து வரும் மத வன்முறை மற்றும் துன்புறுத்தல் பற்றிய செய்திகள் மிகவும் கவலையளிக்கின்றன. சமீபத்திய வாரங்களில் 18 நாட்களுக்குள் குறைந்தது ஆறு இந்துக்கள் கொல்லப்பட்டதாக செய்திகள் வந்துள்ளன. இந்த அளவிலான துன்புறுத்தல் மற்றும் வன்முறை ஏற்றுக்கொள்ள முடியாதது” என்று பிரிதி படேல் பதிவிட்டுள்ளார்.
இதற்கிடையில், வங்கதேச சிறுபான்மையினருக்கான மனித உரிமைகள் காங்கிரஸ்(HRCBM), நாடு முழுவதும் சிறுபான்மையினர் மீதான அதிகரித்து வரும் தாக்குதல்களை எடுத்துக்காட்டி ஏழு மாத காலத்திற்குள் நூற்றுக்கும் மேற்பட்ட இறப்புகள் பதிவாகியுள்ளதாக தெரிவித்துள்ளது.
ஜூன் 6, 2025 முதல் ஜனவரி 5, 2026 வரை, வங்கதேசத்தின் 45 மாவட்டங்களில் 116 சிறுபான்மையினர் கொல்லப்பட்டுள்ளனர்.




