ஐரோப்பா செய்தி

வங்கதேசத்தில் இந்துக்களுக்கு நிகழும் பேரழிவு – பிரிட்டிஷ் பாராளுமன்ற உறுப்பினர் கவலை

வங்கதேசத்தில்(Bangladesh) ஒரு பேரழிவு தரும் சூழ்நிலை குறித்து பிரித்தானிய(British) பாராளுமன்ற உறுப்பினர் பாப் பிளாக்மேன்(Bob Blackman) கவலை தெரிவித்துள்ளார்.

சிறுபான்மையினர், குறிப்பாக இந்துக்கள் மீது வன்முறை அதிகரித்து வருவதாகவும் அவர்கள் தெருக்களில் கொலை செய்யப்படுவதாகவும் அவர்களின் வீடுகள் மற்றும் கோயில்கள் தீக்கிரையாக்கப்படுவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்..

பிரிட்டன் பாராளுமன்றத்தில் பேசிய பாப் பிளாக்மேன், பிப்ரவரி 12ம் திகதி வங்கதேசத்தில் நடைபெறும் தேசியத் தேர்தல்கள் ஜனநாயகக் கவலைகளுக்கு மத்தியில் நடைபெற உள்ளது மிகவும் கவலை அளிக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், வங்காளதேசம் முழுவதும் சிறுபான்மையினரைப் பாதுகாக்கவும் நாட்டில் சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்களை உறுதி செய்யவும் இங்கிலாந்து அரசாங்கம் என்ன நடவடிக்கை எடுக்கும் என்பதை விளக்கும் ஒரு அறிக்கையை பிரிட்டிஷ் வெளியுறவுச் செயலாளரிடமிருந்து பாப் பிளாக்மேன் கோரியுள்ளார்.

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!