சிலந்தி கடியால் அரிதான நோயால் பாதிக்கப்பட்ட பிரித்தானியர்!
ஒரு சிலந்தி கடியால் பிரித்தானியர் ஒருவர் எதிர்கொண்ட அரிதான நோய் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நைஜல் ஹன்ட் என்ற பிரித்தானியர் ஒருவர் விடுமுறையில் சென்றபோது சிறிய சிலந்தியின் கடிக்கு இலக்காகியுள்ளார்.
ஆரம்பத்தில் சிறிய கடியாக இருந்தபோதிலும் பெரிய அளவிலான வலிகள் எதுவும் ஏற்படவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து விடுமுறையில் சென்றபோது அவரது உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. உடனடியாக மருத்துவ உதவியை நாடிய அவர், பரிசோதனைகளை மேற்கொண்டார்.
இதில் ‘சதை உண்ணும் நோய்’ என்று அழைக்கப்படும் நெக்ரோடைசிங் ஃபாஸ்சிடிஸ் இருப்பது தெரியவந்தது.
இது ஒரு அரிதான தொற்று ஆகும், அங்கு தோல் மற்றும் உடலின் மென்மையான திசுக்களில் காயம், சிலந்தி கடி போன்றவை பாக்டீரியாவால் பாதிக்கப்படும். இந்த பாக்டீரியாக்கள் நச்சுகளை வெளியிடுவதால் அவை சுற்றியுள்ள திசுக்களைக் கொல்லும்.
இதனை சரி செய்வதற்காக நைஜலின் வயிற்று பகுதியில் இருந்து சதை பகுதியொன்று வெட்டி எடுக்கப்பட்டதாகதெரிவிக்கப்படுகிறது.