ஐரோப்பா செய்தி

நடு வானில் குலுங்கிய விமானம் – உயிரிழந்த பிரித்தானியர் தொடர்பில் வெளியான தகவல்

சிங்கப்பூரில் இருந்து லண்டன் நோக்கி சென்ற சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் நடுவானில் ஆட்டங்கண்டபோது உயிரிழந்தவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

Geoff Kitchen என அழைக்கப்படும் 73 வயது பிரித்தானியா நாட்டவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளார்.

பிரித்தானியாவின் Thornbury நகரைச் சேர்ந்த அவர் பல வருடங்களாக சமூகச் சேவையாற்றியவர் என்று தெரியவந்துள்ளது.

உள்ளூர் இசை நாடகக் குழுவில் முக்கியப் பங்காற்றிய Geoff Kitchen, கடந்த ஆண்டு நகர சபை தேர்தலில் சுயேச்சையாகப் போட்டியிட்டவர் என தெரியவந்துள்ளது.

35 ஆண்டுகள் பல்வேறு பொறுப்புகளில் சமூகத்திற்குச் சேவையாற்றிய நேர்மையாளர் Geoff Kitchen என்று தொன்புரி இசை நாடகக் குழு Facebook பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

ஓய்வுபெற்ற Geoff Kitchen தமது மனைவியுடன் 6 வார உல்லாசப் பயணத்துக்குத் திட்டமிட்டிருந்ததாக அவருடைய அண்டை வீட்டுக்காரர்கள் செய்தியாளர்களிடம் கூறினர்.

விமானம் ஆட்டங்கண்டபோது கிச்சனுக்கு மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

அவரது மனைவி தற்போது பேங்காக்கில் மருத்துவ உதவி பெற்று வருகிறார். ஆட்டங்கண்ட Boeing 777-300ER ரக விமானம் லண்டனின் ஹீத்ரோ (Heathrow) விமான நிலையத்திலிருந்து சிங்கப்பூருக்குப் புறப்பட்டது.

நடுவானில் ஆட்டங்கண்டதால் அது தாய்லந்துத் தலைநகர் பேங்காக் Suvarnabhumi விமான நிலையத்திற்கு திருப்பிவிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

(Visited 13 times, 1 visits today)

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி