ஐரோப்பா

சட்டவிரோத புலம்பெயர்தலை ஊக்குவிக்கும் ஊடக பயனர்களுக்கு பிரித்தானிய அரசாங்கம் எச்சரிக்கை!

இங்கிலாந்தில் சட்டவிரோத வழிகளில் புலம்பெயர்தல் பற்றி விளம்பரப்படுத்தும் சமூக ஊடக பயனர்களுக்கு எதிராக இன்று முதல் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி குறித்த பயனர்களுக்கு 05 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய குற்றவியல் நிறுவனம் (NCA) ஆன்லைன் தொடர்பு மையம், ஒடுக்குமுறையின் ஒரு பகுதியாக ஆயிரக்கணக்கான சமூக ஊடக கணக்குகளை ஆராயும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே 13 நாட்களுக்குப் பிறகு முதல் முறையாக ஆங்கிலக் கால்வாயை கடந்து புலம்பெயர்ந்தோர் இன்று இங்கிலாந்திற்கு வருகை தந்துள்ளனர்.

கடந்த மாதம் ஆங்கிலக் கால்வாயை கடந்து 933 புலம்பெயர்ந்தோர் வருகை தந்திருந்தனர். இது கடந்த 05 ஆண்டு காலப்பகுதியில் வருகை தந்தவர்களை விட மிகக் குறைந்த எண்ணிக்கையாகும்.

இந்த எண்ணிக்கை ஜனவரி 2025 இல் பதிவு செய்யப்பட்ட 1,098 வருகையுடன் ஒப்பிடும்போது 15% குறைவு. மேலும் ஜனவரி 2024 ஆம் ஆண்டில் பதிவு செய்யப்பட்டதை விட 30 சதவீதம் குறைவாகும்.

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!