விலைவாசி உயர்வு – குடும்பங்களுக்கு 53 மில்லியன் பவுண்ட் நிதியுதவி
மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் பதற்றத்தால் கச்சா எண்ணெய் விலை உயர்ந்ததைத் தொடர்ந்து, வெப்பமூட்டும் எண்ணெயின் விலையும் அதிகரித்துள்ளது.
இதனால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு உதவுவதற்காக £53 மில்லியன் பவுண்ட் நிதி வழங்கப்படும் என பிரித்தானிய பிரதமர் Starmer தெரிவித்துள்ளார்.
இந்த நிதி குறிப்பாக குறைந்த வருமானம் கொண்ட மற்றும் கிராமப்புறங்களில் வசிக்கும் குடும்பங்களுக்கு வழங்கப்படும் என்றம் அவர் அறிவித்துள்ளார்.
இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, வேல்ஸ் மற்றும் வடக்கு அயர்லாந்து ஆகிய பகுதிகளுக்கு இந்த நிதி பகிர்ந்தளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், வெப்பமூட்டும் எண்ணெய் வாடிக்கையாளர்களுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகளையும் அரசாங்கம் ஆய்வு செய்து வருவதாகவும் பிரதமர் கூறியுள்ளார்.





