செய்தி

பிரித்தானிய தேர்தல் – தோல்வியை ஒப்புக்கொண்ட பிரதமர் ரிஷி சுனக்

பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் பொதுத் தேர்தலில் தோல்வியடைந்தார் எனவும் கன்சர்வேட்டிவ் கட்சி தோல்வியடைந்ததற்குப் பொறுப்பேற்றுக்கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தேர்தலில் எதிர்தரப்புத் தொழிற்கட்சி வென்றதாக சுனாக் குறிப்பிட்டுள்ளார்.

தொழிற்கட்சித் தலைவர் கியர் ஸ்டார்மரைத் தொடர்புகொண்டு வாழ்த்துகளைத் தெரிவித்ததாக அவர் கூறினார்.

அமைதியான, சீரான முறையில் ஆட்சி கைமாறும் என்று சுனாக் உறுதியளித்தார். நாட்டின் நிலைத்தன்மைக்கும் எதிர்காலத்துக்கும் அது நம்பிக்கை அளிக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தொழிற்கட்சித் தலைவர் கியர் ஸ்டார்மர், நாடு மாற்றத்துக்குத் தயாராகிவிட்டதாகக் கூறியுள்ளார். பிரித்தானியாவில் அதன் எதிர்காலம் மீண்டும் கிடைத்துவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

(Visited 54 times, 1 visits today)

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி