புகலிடக்கோரிக்கையாளர்களுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கிய பிரித்தானிய நீதிமன்றம்!

புகலிடக்கோரிக்கையாளர்களை ருவாண்டாவிற்கு அனுப்பும் திட்டம் சட்டவிரோதமானது என பிரித்தானிய நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
ருவாண்டா திட்டத்தில் காணப்படும் குறைபாடுகள் காரணமாக புகலிடக்கோரிக்கையாளர்கள் அவர்களின் சொந்தநாடுகளிற்கே திருப்பி அனுப்பப்படும் ஆபத்துள்ளது என நீதிபதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
மேலும் இந்த திட்டத்தில் உள்ள குறைபாடுகள் திருத்தப்படும் வரை புகலிடக்கோரிக்கையாளர்களை ருவாண்டாவிற்கு அனுப்புவது சட்டவிரோதமானது எனவும் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
அத்துடன் இந்த வழக்கு குறித்து மேல் முறையீடு செய்வதற்கான காரணங்களையும் நீதிபதிகள் ஒருமனதாக நிராகரித்துள்ளனர்.
(Visited 10 times, 1 visits today)