மருத்துவ சிகிச்சை பெறும் ஆப்கானில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இங்கிலாந்து தம்பதியினர்

ஆப்கானிஸ்தானில் பல மாதங்களாக தடுத்து வைக்கப்பட்டுள்ள ஒரு வயதான பிரிட்டிஷ் தம்பதியினர் மருத்துவ சிகிச்சை பெற்று வருவதாக தலிபான் அரசாங்கத்தின் உயர்மட்ட தூதர் தெரிவித்தார்.
ஐ.நா நிபுணர்கள் அவர்கள் இறக்கும் அபாயத்தில் இருப்பதாக எச்சரித்ததை அடுத்து, அவர்கள் மருத்துவ சிகிச்சை பெறுகின்றனர்.
80 வயது மற்றும் 75 வயதுடைய பீட்டர் மற்றும் பார்பி ரெனால்ட்ஸ், பிப்ரவரியில் கைது செய்யப்பட்டபோது 18 ஆண்டுகளாக ஆப்கானிஸ்தானில் வசித்து வந்தனர்.
“அவர்களின் அனைத்து மனித உரிமைகளும் மதிக்கப்படுகின்றன,” என்று ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சர் அமீர் கான் முட்டாகி தலைநகர் காபூலில் ஒரு செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.
“அவர்களுக்கு மருத்துவ வசதி வழங்கப்படுகிறது. அவர்கள் அவ்வப்போது தங்கள் குடும்பத்தினருடன் தொடர்பில் உள்ளனர்.” எனவும் குறிப்பிட்டுள்ளார்.
“அவர்களின் விடுதலையைப் பெறுவதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன, ஆனால் செயல்முறை முழுமையடையவில்லை” என்று முட்டாகி தெரிவித்துள்ளார்.
எந்த குற்றச்சாட்டும் சுமத்தப்படாத இந்த தம்பதியினர், “பல மாதங்கள் உயர் பாதுகாப்பு வசதியில் வைக்கப்பட்டு, பின்னர் நிலத்தடி அறைகளில், பகல் வெளிச்சம் இல்லாமல், கடந்த வாரம் காபூலில் உள்ள உளவுத்துறைக்கு மாற்றப்பட்டனர்” என்று ஐ.நா. தெரிவித்துள்ளது.