ஐரோப்பா செய்தி

லண்டனின் ஹீத்ரோ விமான நிலையம் வந்தடைந்த ஆப்கானில் தடுத்து வைக்கப்பட்டிருந்த பிரிட்டிஷ் தம்பதியினர்

ஆப்கானிஸ்தானில் கிட்டத்தட்ட எட்டு மாத தடுப்புக்காவலுக்குப் பிறகு தலிபான் அதிகாரிகளால் விடுவிக்கப்பட்ட வயதான பிரிட்டிஷ் தம்பதியினர் பிரித்தானியா வந்தடைந்துள்ளனர்.

80 வயதான பீட்டர் ரெனால்ட்ஸ் மற்றும் அவரது 77 வயது மனைவி பார்பி வெள்ளிக்கிழமை விடுவிக்கப்பட்டதைத் தொடர்ந்து மருத்துவ பரிசோதனைகளுக்காக தங்கியிருந்த கத்தார் தலைநகர் தோஹாவிலிருந்து விமானத்தில் வந்தனர்.

அவர்களின் உடல்நலம் குறித்த அச்சங்கள் அதிகரித்த பின்னர் தம்பதியினரை தலிபான் விடுவித்தது.

லண்டனின் ஹீத்ரோ விமான நிலையத்தில் இறங்கிய தம்பதியினருடன் அவர்களின் மகள் சாரா என்ட்விஸ்டில் மற்றும் ஆப்கானிஸ்தானுக்கான பிரிட்டிஷ் சிறப்பு பிரதிநிதி ரிச்சர்ட் லிண்ட்சே ஆகியோர் இருந்தனர்.

குறித்த தம்பதி ஆப்கான் சட்டத்தைத் மீறியதால் தடுத்துவைக்கப்பட்டதாக அந்நாட்டு வெளியுறவு அமைச்சு X தளத்தில் தெரிவித்துள்ளது.

(Visited 4 times, 1 visits today)

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி