பிரித்தானியாவில் மில்லியன் கணக்கான தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு!
பிரித்தானியாவில் அடுத்த ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தை நிதியமைச்சர் ரேச்சல் ரீவ்ஸ் (Rachel Reeves) இன்று தாக்கல் செய்துள்ளார்.
இந்நிலையில் அடுத்த ஆண்டு மில்லியன் கணக்கான தொழிலாளர்களுக்கு 1500 பவுண்ட்ஸ் சம்பள உயர்வு கிடைக்கப்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
21 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய தொழிலாளர்களுக்கு ஊதியமானது 4.7% சதவீதம் அதிகரித்து ஒரு மணி நேரத்திற்கு £12.71 ஆக அதிகரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இது முழுநேர ஊழியர்களுக்கு ஆண்டுதோறும் £900 ஊக்கத்தை அளிக்கும் எனவும் ரீவ்ஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதேநேரம் 18 -20 வயதுடைய தொழிலாளர்களுக்கான ஒருமணிநேர ஊதியமானது £10.85 ஆக அதிகரிக்கும் என்றும் ரீவ்ஸ் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.




