பிரித்தானியா செல்லும் அவுஸ்திரேலியர்களுக்கு புதிய கட்டுப்பாடு
அவுஸ்திரேலியாவில் வசிக்கும் இரட்டைப் பிரித்தானியா அல்லது ஐரிஷ் குடியுரிமை கொண்டவர்கள், இனி அவுஸ்திரேலிய கடவுச்சீட்டைப் (Passport) பயன்படுத்தி பிரித்தானியாவிற்குள் நுழைய முடியாது என புதிய பயண விதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
வரும் பெப்ரவரி 25 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் இந்த விதிகளின்படி, பயணிகள் செல்லுபடியாகும் பிரித்தானியா அல்லது ஐரிஷ் கடவுச்சீட்டை வைத்திருக்க வேண்டும். அல்லது, அவுஸ்திரேலிய கடவுச்சீட்டில் ‘உரிமைச் சான்றிதழ்’ (Right of Abode) பெற்று இணைத்திருப்பது அவசியமாகும்.
புதிய மின்னணு பயண அங்கீகார முறை காரணமாக இந்த மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது.
முறையான ஆவணங்கள் இன்றி விமானத்தில் ஏற அனுமதிக்கப்பட மாட்டார்கள் என அதிகாரிகள் எச்சரித்துள்ளதால், பயணிகள் முன்கூட்டியே தயாராகுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.





