ஐரோப்பா

பயணிகளுக்கு உணவுக்குப் பதிலாக KFC கொடுத்த பிரிட்டிஷ் எயார்வேஸ்..!

பிரிட்டிஷ் எயார்வேஸ் விமானச் சேவையில் பயணிகளுக்கு விநியோகிக்கப்பட்ட உணவுக்குப் பதிலாக KFC சிக்கன் வழங்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை (23 ஜூலை) பிரிட்டனின் Turks and Caicos தீவிலிருந்து லண்டனுக்குப் புறப்பட்ட விமானத்தில் பயணிகளுக்கு KFC கோழி வழங்கப்பட்டுள்ளது.எனினும் விநியோகிக்கப்பட்ட KFC சிக்கன் முறையாகக் குளிரூட்டப்படவில்லை என்று ஊடகங்கள் தெரிவித்தன.

சுமார் 12 மணிநேரப் பயணத்தில் பயணிகளுக்கு உணவளிக்கவேண்டும் என்பதால் விமானச் சிப்பந்திகள் மாற்று வழிகளை யோசித்தனர்.

உணவுக்குப் பதிலாக பயணிகளுக்கு KFC சிக்கன் வழங்கிய பிரிட்டிஷ் எயார்வேஸ்! | British Airways Served Passengers Kfc Chicken

விமானம் சிறிது நேரம் பஹாமாஸில் (Bahamas) நிறுத்தப்பட்டபோது சிப்பந்திகள் KFC உணவகத்திலிருந்து கோழி வாங்கினர்.

மேலும் உணவகத்தில் பொரித்த கோழி பரிமாறுவதற்குப் பயன்படுத்தப்படும் வாளிகள் சிலவற்றைச் சிப்பந்திகள் வைத்திருக்கும் காணொளிகள் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளது.

(Visited 3 times, 1 visits today)
Avatar

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்

You cannot copy content of this page

Skip to content