பிரித்தானியாவின் நிகர இடப்பெயர்வு உச்சம் தொட்டது!
பிரித்தானியாவில், டிசம்பர் 2022 ஆம் ஆண்டுவரையில் நிகர இடப்பெயர்வு, 6 இலட்சத்து 6 ஆயிரமாக உயர்ந்துள்ளதாக அதிகாரப்பூர்வ புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன.
நிகர இடம்பெயர்வு என்பது இங்கிலாந்திற்கு வரும் நபர்களின் வருடாந்திர எண்ணிக்கையாகும்.
தேசிய புள்ளியியல் அலுவலகத்தால் வெளியிடப்பட்ட புள்ளிவிவரங்களின் அடிப்படையில், 2022 இல் மொத்த நீண்ட கால குடியேற்றம் சுமார் 1.2 மில்லியனாக காணப்பட்டழதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு UK க்கு வருகைத் தந்த பெரும்பாலான மக்களில் European Union ஐ அல்லாதவர்கள் 9 இலட்சத்து 25 ஆயிரமாக காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து ஐரோப்பிய யூனியனைச் சேர்ந்தவர்கள் 151000 பேரும், பிரித்தானியாவைச் சேர்ந்தவர்கள் 88 ஆயிரமாகவும் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரைனில் நடந்த போர் மற்றும் ஹாங்காங்கில் அமைதியின்மை உள்ளிட்ட காரணங்களால் இவ்வாறு இடப்பெயர்வு அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.
ஐரோப்பிய ஒன்றியம் அல்லாத சர்வதேச மாணவர்களிடமிருந்தும், அவர்களைச் சார்ந்தவர்களிடமிருந்தும் குடியேற்றத்தின் அளவுகள் அதிகமாக இருப்பதாக புள்ளிவிபரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.