பிரித்தானியாவின் ETA திட்டம் : குடியேற்ற சேவைகள் பாதிக்கப்பட வாய்ப்பு – எச்சரிக்கும் நிபுணர்கள்!
ஐரோப்பிய வணிகப் பயணிகள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கு ஏப்ரல் மாதத்தில் புதிய விசா-தள்ளுபடி முறை அமலுக்கு வரும்போது, இங்கிலாந்து உள்துறை அலுவலகத்தின் குடியேற்ற சேவைவைகள் அதிகமாகிவிடும் என சட்டநிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
மின்னணு பயண அங்கீகாரம் (ETA) தேவைகள் வடக்கு அயர்லாந்தில் அமைதிக்குப் பிந்தைய சுற்றுலாத் துறையை அச்சுறுத்தக்கூடும் என்ற புதிய எச்சரிக்கைகளும் வந்துள்ளன.
ETA திட்டம், பிரிட்டனுக்குள் நுழைய விசா தேவையில்லாத பார்வையாளர்கள் £10 செலவில் ஆன்லைனில் பயணத்திற்கு முந்தைய அங்கீகாரத்தைப் பெற வேண்டும் என்று கோருகிறது.
இது கடந்த ஆண்டு வளைகுடா நாடுகளைச் சேர்ந்த பயணிகளுக்காக அறிமுகப்படுத்தப்பட்டது,தற்போது 50 நாடுகளுக்கு விரிவுப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கமைய அர்ஜென்டினா, பிரேசில், நியூசிலாந்து, ஜப்பான், தென் கொரியா மற்றும் கரீபியன் நாடுகள் உட்பட சுமார் 50 நாடுகள் இதனை பயன்படுத்திக் கொள்ள முடியும்.