புலம்பெயர்ந்தோருக்கு எதிரான பிரித்தானியாவின் திட்டம் – வரவேற்கும் பிரான்ஸ்

சட்டவிரோத புலம்பெயர்ந்தோரை ருவாண்டா நாட்டுக்கு கடத்தும் பிரித்தானியாவின் சட்டத்திற்கு பிரான்சில் அமோக வரவேற்பு எழுந்துள்ளது.
பிரித்தானியாவுக்குள் படகுகள் மூலமாகவோ, வாகனங்களில் பதுங்கி, மறைந்தோ நுழைபவர்களை, நாட்டில் இருந்து வெளியேற்றி ருவாண்டா நாட்டுக்கு அழைத்துச் செல்லும் புதிய திட்டம் ஒன்றை பிரித்தானியா அறிவித்துள்ளது.
இந்த திட்டத்துக்கு பிரான்சில் 67% சதவீதமான மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
முக்கிய ஊடகங்களுக்காக CSA நிறுவனம் மேற்கொண்ட கருத்துக்கணிப்பில் இது தெரியவந்துள்ளது. இன்று வெளியான கருத்துக்கணிப்பின் முடிவில், கிட்டத்தட்ட பத்தில் ஏழு பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
32% சதவீதமானவர் ஆதரவு தெரிவிக்கவில்லை எனவும், 1% சதவீதமானவர்கள் கருத்து வெளியிடவில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.
(Visited 24 times, 1 visits today)