இராணுவ குழுவினரை கிரீன்லாந்திற்கு அனுப்பும் பிரித்தானியா!
பிரித்தானிய அரசாங்கம் இராணுவ அதிகாரி ஒருவரின் தலைமையில் குழுவொன்றை கிரீன்லாந்திற்கு அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ட்ரம்பின் கீரீன்லாந்து மீதான ஆக்கிரமிப்பு நடவடிக்கையை தொடர்ந்து பல நட்பு நாடுகளின் ஒருங்கிணைந்த கூட்டு நடவடிக்கையின் ஒரு பகுதியாக மேற்படி இராணுவ குழுவினர் அனுப்பப்பட்டுள்ளனர்.
பிரித்தானியாவை போலவே ஜெர்மனி, சுவீடன், நோர்வே மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளும் பணியாளர்களை அனுப்பவுள்ளன.
இதேவேளை இந்த விடயம் தொடர்பில் டேனிஸ் பிரதமர் மற்றும் அமெரிக்க பிரதிநிதிகளுக்கு இடையிலான சந்திப்பு ஒன்றும் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தகது.





