உக்ரைனுக்கு 20 மில்லியன் பவுண்டுகளை வழங்கும் பிரித்தானியா!
உக்ரைனில் மின் கட்டமைப்பை மீட்டெடுக்கவும், பாதுகாக்கவும் 20 மில்லியன் பவுண்டுகளை வழங்க பிரித்தானியா நடவடிக்கை எடுத்துள்ளது.
அத்துடன் “100 ஆண்டு கூட்டாண்மை”யின் கீழ் அடுத்த மூன்று ஆண்டுகளில் 300 பாடசாலைகளை உருவாக்கவும் உறுதிபூண்டுள்ளது.
இதேவேளை சர்வதேச நாணய நிதியத் தலைவர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா (Kristalina Georgieva) கியேவில் உள்ள உயர் உக்ரைனிய அதிகாரிகளைச் சந்தித்துள்ளதுடன், ரஷ்யாவின் தாக்குதல்களினால் சேதமடைந்த மின் கட்டமைப்பையும் பார்வையிட்டுள்ளார்.
மேலும் முக்கிய நகரமான குபியன்ஸ்கை (Kupiansk) மீண்டும் பெறுவதற்கான போரில் உயிரிழந்த ஒவ்வொரு உக்ரேனிய சிப்பாய்க்கும் பிரதியீடாக குறைந்தது 27 ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
பிரித்தானிய இராணுவத்திற்கு வழங்கப்பட்ட சமீபத்திய உளவுத்துறை மதிப்பீடுகளில் இந்த தரவுகள் இடம்பெற்றுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.





