பிரித்தானியா – ஈயோ புயல் எதிரொலி : மரம் முறிந்து விழுந்ததில் இளைஞர் பலி!
பிரித்தானியாவில் வீசிய புயல் ஈயோவில் சிக்கி 20 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த இளைஞர் செலுத்திய கார் மீது மரம் ஒன்று முறிந்து விழுந்ததில் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
போலந்தில் பிறந்து, டோனகலின் லிஃபோர்டில் வளர்ந்த ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இளைஞனின் உடல் லெட்டர்கென்னி பல்கலைக்கழக மருத்துவமனையில் உள்ள சவக்கிடங்கிற்கு கொண்டு வரப்பட்டுள்ளதாகவும், அங்கு பிரேத பரிசோதனை இடம்பெறவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.





