ஜமைக்காவில் (Jamaica) வீடுகளை இழந்து தவிப்போருக்காக நிதி திரட்டும் பிரித்தானியா!
ஜமைக்காவில் (Jamaica) வீடுகளை இழந்து தவிப்போருக்காக பிரித்தானியா நிதி திரட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.
முன்னதாக மனிதாபிமான உதவிக்காக 2.5 மில்லியன்களை வழங்குவதாக அறிவித்துள்ள நிலையில் மேலதிகமாக £5 மில்லியன் வரை சேகரிக்க இலக்கு வைத்துள்ளாக தெரிவிக்கப்படுகிறது.
இந்தப் புதிய நிதி, வீடுகள் சேதமடைந்தவர்களுக்கும் மின்சாரம் இல்லாதவர்களுக்கும் உதவுவதற்காக வழங்கப்படும் எனக் கூறப்படுகிறது.
இதேவேளை ஜமைக்காவை (Jamaica) தாக்கிய மெலிசா (Melissa) சூறாவளியால் 28 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
மெலிசா சூறாவளியால் நாட்டின் பல பகுதிகள் பாதிக்கப்பட்டன. குறிப்பாக ஹைட்டி, டொமினிகன் குடியரசு மற்றும் கியூபா ஆகியவை கடுமையான பாதிப்புக்களை சந்தித்துள்ளன.
185 கிலோமீற்றர் வேகத்தில் வீசிய காற்றினால் பல வீடுகள் உடைந்தன. மரங்கள் முறிந்து விழந்தமையால் உயிரிழப்புகளும் ஏற்பட்டன.
இந்நிலையில் இந்த சீரற்ற வானிலையால் 28 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். அவர்களின் உறவினர்களுக்கு ஆழந்த இரங்கலையும் தெரிவித்துள்ளனர்.





