சொந்த நாடுகளுக்கு திரும்ப விரும்பும் புலம்பெயர்ந்தோருக்கு பிரித்தானியா வழங்கும் சலுகை!
பிரித்தானியாவிற்கு புலம்பெயர்ந்தவர்கள் தங்கள் சொந்த நாடுகளுக்கு திரும்ப வழங்கப்படும் கொடுப்பனவு அதிகரிக்கப்படும் என உள்துறை செயலாளர் ஷபானா மஹ்மூத் (Shabana Mahmood) தெரிவித்துள்ளார்.
தங்கள் சொந்த நாட்டிற்கு திரும்பிச் செல்ல விரும்புகின்றவர்களுக்கு £3,000 வழங்கப்படுகிறது.
இந்நிலையில் குறித்த தொகை அதிகரிக்கப்படும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
இங்கிலாந்தில் தஞ்சம் கோரும் புலம்பெயர்ந்தோரைத் தடுக்கவும், தஞ்சம் கோரியவர்கள் தாமாக முன்வந்து தங்கள் சொந்த நாட்டிற்கு செல்வதற்கும் ஷபானா மஹ்மூத் (Shabana Mahmood) கையில் எடுத்துள்ள இந்த திட்டத்தை தொழிற்கட்சியின் பின்வரிசை உறுப்பினர்கள் கடுமையாக எதிர்த்துள்ளனர்.
(Visited 3 times, 3 visits today)




