இலவச பஸ் பாஸ்களை வழங்கும் பிரித்தானியா : புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு கிட்டியுள்ள வாய்ப்பு!
பிரித்தானியாவில் உள்ள புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு இலவச பஸ் பாஸ்களை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
நவம்பர் 11, திங்கட்கிழமை தொடங்கப்பட்ட இந்த முன்னோடித் திட்டமானது, ஆக்ஸ்போர்டுஷையரில் தஞ்சம் கோரியுள்ள புலம்பெயர்ந்தோர், பேருந்துகளில் இலவசமாக பயணிப்பதற்கான அணுகலை வழங்குகிறது.
இந்த முயற்சிக்கு Asylum Welcome மற்றும் Citizens UK ஆதரவு அளித்துள்ளது.
ஆக்ஸ்போர்டு பஸ் நிறுவனத்தின் இணையதளம் சிட்டிசோன் நாள் பாஸின் விலையை £4.50 என பட்டியலிடுகிறது. வாரத்திற்கு £18 பவுண்ட்ஸும், வருடத்திற்கு £499 பவுண்ட்ஸ்களையும் வசூலிக்கிறத.
2024 ஆம் ஆண்டின் இறுதி வரை வயது வந்தோருக்கான ஒற்றை டிக்கெட்டுகளை £2 என்ற அளவில் கட்டுப்படுத்தும் அரசாங்க ஆதரவுடைய திட்டத்தையும் நிறுவனம் வழங்குகிறது.
புகலிடக் கோரிக்கையாளர்கள் இலவச அனுமதிச் சீட்டுகளை வரவேற்று, ஆக்ஸ்ஃபோர்டு மெயிலுக்கு இந்தத் திட்டம் எப்படி அவர்களின் அன்றாட வாழ்க்கையை மாற்றியமைத்துள்ளது என்று தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.