ஐரோப்பா முக்கிய செய்திகள்

பிரித்தானிய வீட்டுக் கடன் சந்தையில் பாரிய நெருக்கடி: வட்டி வீதங்கள் சடுதியாக அதிகரிப்பு!

பிரித்தானியால் வீட்டுக்கடன் (Mortgage) சந்தையில் தற்போது நிலவும் பதற்றநிலை, கடந்த 2022-ஆம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதார சரிவுக்குப் பின்னர் மிக மோசமான நிலையை எட்டியுள்ளதாக நிதிச் சந்தை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இரண்டு ஆண்டுகால நிலையான வீட்டு கடன்களுக்கான சராசரி வட்டி வீதம் 5.01% ஆக உயர்ந்துள்ளது. இது கடந்த ஆகஸ்ட் மாதத்திற்குப் பின்னரான மிக உயர்ந்த மட்டமாகும். இதேவேளை, ஐந்து ஆண்டுகால வீட்டுக் கடன்களுக்கான வட்டியும் 5.09% ஆக அதிகரித்துள்ளது.

கடந்த இரண்டு நாட்களில் மாத்திரம் சுமார் 500 வீட்டுக் கடன் திட்டங்கள் (Products) சந்தையிலிருந்து வங்கிகளால் நீக்கப்பட்டுள்ளன. இது மொத்த சந்தையில் 6.5 சதவீதமாகும்.

அமெரிக்கா – இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான போர்ச் சூழலால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ளது. இதனால் பணவீக்கம் உயர்வடையக்கூடும் என்ற அச்சத்தில், வட்டி வீதங்களைக் குறைக்கும் திட்டத்தை இங்கிலாந்து வங்கி (Bank of England) கைவிட்டுள்ளதாகப் பொருளியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

பிரித்தானியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளும் சடுதியாக அதிகரித்துள்ளன. போர் தொடங்கிய பிப்ரவரி 28 முதல் டீசல் விலை 9 சதவீதத்தால் உயர்ந்துள்ளதுடன், இது லிட்டருக்கு 167 பென்ஸ் (167p) வரை அதிகரிக்கக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

மேலும் புதிதாக வீடு வாங்குவோர் மற்றும் தமது வீட்டுக் கடன் காலத்தை புதுப்பிக்கக் காத்திருப்போர் இதனால் பெரும் நிதி நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளனர். எவ்வாறாயினும், வாடிக்கையாளர்கள் தமது கடன் காலம் முடிவதற்கு 4 மாதங்களுக்கு முன்னரே புதிய வட்டி விகிதங்களுக்கு மாறுவதன் மூலம் (Rate switch) ஓரளவிற்குப் பாதுகாப்பைப் பெற முடியும் எனத் துறைசார் நிபுணர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர்.

AJ

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!