மஸ்கின் Grok தொழில்நுட்பம் குறித்து விசாரணைகளை ஆரம்பித்த பிரித்தானியா!
எலோன் மஸ்க்கின் X சமூக ஊடக தளத்தில் பெண்களின் அரை நிர்வாண படங்களை உருவாக்கப் பயன்படுத்தப்படும் செயற்கை நுண்ணறிவு (AI) கருவியான Grok-ஐப் பயன்படுத்துவது குறித்து பிரித்தானியா விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
பிரிட்டிஷ் ஊடக ஒழுங்குமுறை அமைப்பான Ofcom இந்த விசாரணையைத் தொடங்கியுள்ளது.
X சமூக ஊடக தளத்தில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ள Grok AI-ஐப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட ஏராளமான பாலியல் படங்கள் சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டதை அடுத்து, மேற்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஆன்லைன் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் விசாரணை நடத்தப்படுகிறது. சட்டம் மீறப்பட்டதாகக் கண்டறியப்பட்டால், கடுமையான அபராதங்கள், சேவை கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.





