ஐரோப்பா

ரஷ்யா மீது மேலும் பல பொருளாதார தடைகளை விதிக்க தயாராகும் பிரித்தானியா!

ரஷ்யா மீது மேலும் பொருளாதார தடைகள் விதிக்கப்படும் என பிரதமர் கெய்ர் ஸ்டாமர் தெரிவித்துள்ளார்.

‘விருப்ப கூட்டணி’ என்ற பெயரில் பிரான்ஸ் அதிபர் இம்மானுவல் மேக்ரானும், ஜெர்மன் அதிபர் பிரைட்ரிச் மெர்சும் வீடியோ அழைப்பில் பேசிய அவர் இதனை அறிவித்துள்ளார்.

இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், அமெரிக்க அதிபர் டிரம்ப் மேற்கொண்ட முயற்சிகள், உக்ரைன் மீதான ரஷியாவின் சட்ட விரோத போரை முடிவுக்கு கொண்டு வருவதில் முன் எப்போதையும் விட நம்மை நெருக்கமாக ஒன்று சேர்த்துள்ளன.

கொலைகள் நடப்பதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் அவரது தேடலை நாம் பாராட்ட வேண்டும். அதில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

அடுத்தகட்டமாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை இணைத்து பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும். அவர் இல்லாமல் உக்ரைன் பிரச்சனைக்கான அமைதி தீர்வை முடிவு செய்ய முடியாது.

உக்ரைனுக்கு வலுவான பாதுகாப்பு உத்தரவாதம் அளிக்கும் அமெரிக்காவின் வெளிப்படைத் தன்மையை ஐரோப்பாவுடன் இணைந்து வரவேற்கிறேன். ரஷிய அதிபர் புதினை தடுப்பது முக்கியம்.

உக்ரைன் மீதான கொடூர தாக்குதலை புதின் நிறுத்தும் வரை, ரஷியா மீது மேலும் பல பொருளாதார தடைகளை நாங்கள் விதிப்போம். அவை ரஷிய பொருளாதாரத்துக்கும், அதன் மக்களுக்கும் ஏற்கனவே தண்டனையாக அமைந்துள்ளன என தெரிவித்தார்.

(Visited 3 times, 1 visits today)

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!