பறவைக் காய்ச்சல் நோய் தொற்றிலிருந்து முற்றாக விடுபட்ட பிரித்தானியா!
பிரித்தானியாவில் காற்றில் எளிதாக தொற்றக்கூடிய பறவைக் காய்ச்சல் நோய்க்கிருமியிலிருந்து முழுவதுமாக விடுபட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
சுற்றுச்சூழல், உணவு மற்றும் ஊர்ப்புற விவகார துறை அமைச்சகத்தின் அறிவிப்பை உலக விலங்குகள் சுகாதார அமைப்பு சரிபார்த்து புதுப்பித்துள்ளது.
2021ஆம் ஆண்டு முதல் 360 க்கும் அதிகமான உறுதிப்படுத்தப்பட்ட பறவைக் காய்ச்சல் தொற்றை பிரித்தானியாவை சந்தித்தது.
பறவைகளிடமிருந்து பரவும் நோய்க்கிருமிகளால் உருவாகும் இந்த தொற்றால் தற்போதைக்கு யாரும் பாதிக்கப்படவில்லை.
2024ஆம் ஆண்டு பெப்வரி மாதம் 14ஆம் திகதி கடைசியாக ஒருவர் பாதிக்கப்பட்டதாகவும் அமைச்சகம் தெரிவிக்கிறது.
ஹெச்பிஏஐ ஹெச்5 வகை கிருமிகள் பிரித்தானியாவில் குறைவாக உள்ளது. ஹெச்பிஏஐ ஹெச்5என்1 பிரித்தானியா மற்றும் ஐரோப்பா முழுவதும் உள்ள பண்ணை பறவைகள் மற்றும் பிடிக்கப்பட்ட பறவைகளில் குறைவாகக் காணப்படுகிறது.