ரஷ்யாவிற்கு புதிய பொருளாதார தடைகளை விதித்த பிரித்தானியா!
ரஷ்யாவிற்கு எதிராக 18 மாதங்களுக்கு மிகப்பெரிய பொருளாதார தடைகளை விதித்துள்ளதாக பிரிட்டிஷ் அரசாங்கம் தெரிவித்துள்ளது.
உக்ரைன் போரில் ஈடுபட்டவர்களை குறிவைத்து, ஆப்பிரிக்க கூலிப்படை குழுக்கள் மற்றும் பிரிட்டிஷ் மண்ணில் ஒரு நரம்பு முகவர் தாக்குதல் ஆகியோரை குறிவைத்து இந்த பொருளாதார தடைகளை விதித்துள்ளதாக பிரிட்டிஷ் அரசாங்கம் தெரிவித்துள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா போர் நடவடிக்கையை தொடங்கியதை அடுத்து பிரித்தானியா, அமெரிக்கா, மற்றும் ஐரோப்பா நாடுகள் போன்றவை இணைந்து ரஷ்யாவின் மீது அடுக்கடுக்கான பொருளாதார தடைகள் விதித்தனர்.
ரஷ்யாவின் மீதான இந்த பொருளாதார தடைகள் உலக வர்த்தகத்தை பெரும் அளவு பாதித்து இருந்தாலும், உக்ரைன் மீதான ரஷ்யாவின் அத்துமீறிய தாக்குதல் தொடர்வதால் மேற்கத்திய நாடுகள் ரஷ்யாவின் மீது விதித்த பொருளாதார தடைகளை இன்றுவரை விலக்காமல் உள்ளனர்.
இந்நிலையில், ரஷ்யாவின் நடவடிக்கையை கண்டித்து பிரித்தானியா, ரஷ்யாவின் முக்கிய 56 நபர்கள் மற்றும் பெரு நிறுவனங்கள் மீது புதிய பொருளாதார தடைகளை விதித்துள்ளது.
அவற்றில் சீனாவை தளமாகக் கொண்ட 10 நிறுவனங்கள் ரஷ்ய இராணுவத்திற்கான இயந்திரங்கள் மற்றும் கூறுகளை வழங்குவதாகக் கூறப்படுகிறது.
மேலும், மாஸ்கோ பலமுறை பிரிட்டிஷ் குற்றச்சாட்டுகளை நிராகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.