பொருளாதார மந்த நிலையில் இருந்து மீண்டது பிரித்தானியா
பிரித்தானியா தற்போது பொருளாதார மந்தநிலையில் இருந்து மீண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மார்ச் காலாண்டில் ஏற்பட்ட வலுவான வளர்ச்சியை தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தொடர்ந்து இரண்டு காலாண்டுகளாக பொருளாதார வளர்ச்சி சரிவை கண்டதை அடுத்து, பிரித்தானியா, கடந்த ஆண்டு இறுதியில், பொருளாதார மந்தநிலைக்கு உள்ளானது.
எனினும், நடப்பாண்டின் முதல்காலாண்டில், கடந்த இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, 0.6 சதவீதத்தில் விரைவான பொருளாதார வளர்ச்சி பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, பொருளாதார மந்தநிலையில் இருந்து பிரித்தானியா மீண்டுள்ளது. இந்நிலையில், அடுத்த சில மாதங்களில், பணவீக்க இலக்கு அளவை எட்ட முடியும் என்று இங்கிலாந்து வங்கி அறிவித்துள்ளது.
(Visited 3 times, 1 visits today)