சூடானில் போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்த பிரித்தானியா, ஜெர்மனி மற்றும் ஜோர்டான்
பஹ்ரைன்(Bahraini) தலைநகர் மனாமாவில்(Manama) நடந்த பாதுகாப்பு உச்சிமாநாட்டில் பங்கேற்ற வெளியுறவு அமைச்சர்கள், டார்பரின்(Darfur) அல்-பாஷர்(Al-Fasher) நகரில் விரைவு ஆதரவுப் படையினரின் அட்டூழியங்களுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.
கிழக்கு ஆப்பிரிக்க நாட்டின் டார்பர்(Darfur) பகுதியில் சமீபத்திய மனித உரிமை மீறல்களை அடுத்து, சூடானில் உடனடி போர் நிறுத்தத்திற்கு பிரித்தானியா(UK), ஜெர்மனி(Germany) மற்றும் ஜோர்டான்(Jordan) வெளியுறவு அமைச்சர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
மேலும், சூடானின் மேற்குப் பகுதியில் உள்ள கடைசி பெரிய நகரத்தை துணை ராணுவப் படை கைப்பற்றிய பின்னர், இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக மிருகத்தனமான உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்டுள்ள சூடானின் நிலைமையை “பேரழிவு” என்று வெளியுறவு அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர்.
துணை ராணுவ விரைவு ஆதரவுப் படை போராளிகள் அல்-ஃபாஷர் நகருக்குள் புகுந்து, மருத்துவமனையில் 450க்கும் மேற்பட்டவர்களை கொலை செய்ததை தொடர்ந்து அமைச்சர்களின் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்தி
மகப்பேறு மருத்துவமனை மீது தாக்குதல் நடத்திய சூடான் துணை ராணுவப் படை ;460 பேர் பலி





