30 ஆண்டுகளில் முதல் முறையாக ரயில் கட்டணங்களை முடக்கிய பிரித்தானியா!
பிரித்தானியாவில் கடந்த 30 ஆண்டுகளில் முதல் முறையாக ரயில் கட்டணங்களை முடக்கும், அல்லது இரத்து செய்யும் திட்டத்தை அரசாங்கம் நேற்று அறிவித்துள்ளது.
இது மில்லியன் கணக்கான மக்களின் பணத்தை மிச்சப்படுத்தும் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இந்த திட்டமானது பிரித்தானிய அரசாங்கத்தினால் இயக்கப்படும் ரயில் சேவைகளுக்கு பொருந்தும்.
மக்களின் நிதி சுமையை குறைக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக இந்த திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் ரேச்சல் ரீவ்ஸ் (Rachel Reeves) அறிவித்துள்ளார்.
அதே நேரத்தில் போக்குவரத்து செயலாளர் ஹெய்டி அலெக்சாண்டர் (Heidi Alexander) இந்த திட்டத்தை வரவேற்று கருத்து வெளியிட்டுள்ளார்.
புதிய திட்டத்தின்படி, “அதிக விலையுயர்ந்த பாதைகளில் பயணிப்பவர்கள், சீசன் டிக்கெட்டுகளை வைத்திருப்பவர்கள் ஆண்டுக்கு £300 பவுண்ட்ஸுக்கும் அதிகமாக சேமிப்பார்கள் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கை ரயில் தொழிற்சங்கங்கள் மற்றும் பயணிகள் குழுக்களால் பரவலாக வரவேற்கப்பட்டுள்ளது.
இதேவேளை அடுத்தவாரம் தாக்கல் செய்யப்படவுள்ள வரவு செலவு திட்டத்தில், , NHS காத்திருப்புப் பட்டியலைக் குறைத்தல், தேசியக் கடனைக் குறைத்தல் மற்றும் வாழ்க்கைச் செலவைக் குறைத்தல் போன்ற முக்கிய திட்டங்கள் அறிவிக்கப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேலதி தகவல்களுக்கு
https://www.gov.uk/government/news/first-rail-freeze-in-30-years-to-ease-the-cost-of-living




