ஐரோப்பா

சட்டவிரோத டெலிவரி ரைடர்கள் மீது நடவடிக்கை எடுத்து 280 பேரை கைது செய்த பிரிட்டன்

பிரிட்டனில் விநியோக ஓட்டுநர்களாகச் சட்டவிரோதமாய் வேலை செய்த கிட்டத்தட்ட 280 குடியேறிகளைக் காவல்துறை அதிகாரிகள் கைதுசெய்துள்ளனர்.

கடந்த மாதம் 20ஆம் திகதியிலிருந்து 27ஆம் திகதி வரை நீடித்த ஒருவார சோதனை நடவடிக்கைகளில் குடிநுழைவு அமலாக்க அதிகாரிகள் கிட்டத்தட்ட 1,780 தனிநபர்களை தடுத்துநிறுத்தி விசாரணை நடத்தினர்.

அவர்களில் விநியோக ஓட்டுநர் பணியில் சட்டவிரோதமாக ஈடுபட்ட 280 பேர் கைதுசெய்யப்பட்டதாகப் பிரிட்டி‌ஷ் உள்துறை அமைத்து தெரிவித்தது. அவர்களுள் பிரிட்டனில் தஞ்சம் புகுந்த 53 பேருக்கான ஆதரவு மறுஆய்வு செய்யப்படுகிறது.

கள்ளக் குடியேற்றத்தை முறியடிக்க அரசாங்கம் மேற்கொண்ட சோதனை நடவடிக்கைகளில் அதுவும் ஒன்று. வேலைக்கு ஆள்சேர்க்கும் நபர்களின் குடியுரிமை நிலையைச் சரிபார்க்கும்படி நிறுவனங்களுக்கான புதிய சட்டபூர்வ விதிமுறை அமல்படுத்தப்பட்டது.

கள்ளக் குடியேற்றத்தைக் கையாள முடியும் என்று வாக்காளர்களுக்கு நிரூபிக்க பிரிட்டி‌ஷ் பிரதமர் கியர் ஸ்டார்மர் அதிக நெருக்குதலுக்கு ஆளாகியுள்ளார.

“நாட்டின் விதிமுறைகள் மதிக்கப்படுவதை, கடைப்பிடிக்கப்படுவதை இந்த அரசாங்கம் உறுதிசெய்கிறது,” என்றார் எல்லைப் பாதுகாப்பு அமைச்சர் எஞ்சலா ஈகல்.சட்டவிரோத விநியோக ஓட்டுநர்கள் கைதானதைத் தவிர 51 வர்த்தகங்களுக்கு அபராதம் விதிக்கும் அறிக்கை அனுப்பப்பட்டது. கார் கழுவும் நிறுவனங்கள், உணவகங்கள் ஆகியவைமீது சட்டவிரோதமாக ஊழியர்களைப் பணியமர்த்தியதற்காக அபராதம் விதிக்கப்படலாம்.

காவல்துறை அதிகாரிகள் 58 மின் சைக்கிள்கள் உட்பட 71 வாகனங்களைப் பறிமுதல் செய்தனர். அவர்கள் 8,000 பவுண்ட் ரொக்கத்தையும் 460,000 பவுண்ட் மதிப்புடைய கள்ள சிகரெட்டுகளையும் கைப்பற்றினர்.சட்டவிரோதமாக வேலை செய்வோரைக் கையாளா குடிநுழைவு அமலாக்கப் பிரிவுக்குக் கூடுதலாக 5 மில்லியன் பவுண்ட் நிதி வழங்கப்படும் என்று பிரிட்டி‌ஷ் உள்துறை அமைச்சு சொன்னது.

கடந்த 12 மாதங்களில் பிரிட்டன் 35,052 கள்ளக் குடியேறிகளை அவர்களின் சொந்த நாட்டுக்கு அனுப்பியது. அதற்கு முந்திய மாதங்களுடன் ஒப்பிகையில் அது 13% அதிகம்.

(Visited 1 times, 1 visits today)

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
Skip to content