ஐரோப்பா

இரண்டு சீன நிறுவனங்களுக்கு தடை விதித்த பிரித்தானியா!

பிரித்தானிய அரசாங்கம் இரண்டு சீன நிறுவனங்களுக்கு  தடை விதித்துள்ளது.

ரஷ்யாவிற்கு ஆதரவாக தகவல்களை திரித்ததாகவும்,  இங்கிலாந்து மற்றும் அதன் நட்பு நாடுகளுக்கு எதிரான சைபர் தாக்குதல்களுக்கு திட்டமிட்டதாகவும் அந்நிறுவனங்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

ஐரோப்பா முழுவதும் ஜனநாயகங்களை சீர்குலைக்கவும், நமது முக்கியமான தேசிய உள்கட்டமைப்பை பலவீனப்படுத்தவும், நமது நலன்களை குறைமதிப்பிற்கு உட்படுத்தவும் வடிவமைக்கப்பட்ட கலப்பின அச்சுறுத்தலை நாம் காண்கிறோம் என பிரித்தானிய வெளியுறவுத்து தகவல் வெளியிட்டுள்ளது.

குறித்த நிறுவனங்கள் கிரெம்ளினுக்கு ஆதரவாக ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கதைகளை திரிபுப்படுத்தியதாக வெளியுறவுத்துறை செயலாளர் யெவெட் கூப்பர் (Yvette Cooper) குற்றம் சுமத்தியுள்ளார்.

கிரெம்ளின் கதைகளை மேற்கத்திய பார்வையாளர்களுக்கு விளம்பரப்படுத்துவதற்கும், குற்றவாளிகள் என்று தீர்ப்பளிக்கப்பட்ட ரஷ்ய கொலையாளிகள் மற்றும் ஆயுதக் கடத்தல்காரர்களுக்கு சட்டப்பூர்வ பாதுகாப்புகளை வழங்குவதற்கும் இவை துணைப்புரிவதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!