ரஷ்யாவின் ஹேக்கர்களுக்கு தடைவிதித்த பிரித்தானியா!
இங்கிலாந்து மற்றும் அமெரிக்க அரசாங்கங்கள் இரண்டு ரஷ்ய ஹேக்கர்கள் மீது பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளன.
குறித்த இருவரும் எம்.பி.க்கள், பிரபுக்கள், அரசு ஊழியர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் பிறரை குறிவைத்து, சைபர் தாக்குதல் நடத்தியதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்ட நிலையில், மேற்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் பிரிட்டன் ரஷ்ய தூதரை வரவழைத்துள்ளது பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. இருப்பினும் லண்டனில் உள்ள ரஷ்ய தூதரகம் சைபர் தாக்குதல்கள் குறித்த பிரிட்டிஷ் தூண்டுதல்களை நம்புவதற்கு எந்த காரணங்களும் இல்லை எனத் தெரிவித்துள்ளது.
குறித்த இருவரும் பிறரின் தனிப்பட்ட தகவல்களை திருடுவதற்காக “ஸ்பியர்-ஃபிஷிங்” என்று அழைக்கப்படும் ஒரு நுட்பத்தை பயன்படுத்தியதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
(Visited 8 times, 1 visits today)