மேற்கு ஜப்பானின் வானத்தில் திடீரென தோன்றிய பிரகாசமான வெளிச்சம்

மேற்கு ஜப்பானின் வானத்தில் ஒரு ஒளிரும் தீப்பந்து பாய்ந்து, குடியிருப்பாளர்களையும், நட்சத்திரப் பார்வையாளர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது, இருப்பினும் நிபுணர்கள் இது ஒரு இயற்கை நிகழ்வு என்றும் வேற்றுகிரகவாசிகளின் படையெடுப்பு அல்ல என்றும் தெரிவித்துள்ளனர்.
இரவு நூற்றுக்கணக்கான கிலோமீட்டர்களுக்குத் தெரியும் மிகவும் பிரகாசமான ஒளிப் பந்தின் வீடியோக்களும் புகைப்படங்களும் ஆன்லைனில் வெளிவந்தன.
“நான் இதற்கு முன்பு பார்த்திராத ஒரு வெள்ளை ஒளி மேலிருந்து கீழே வந்தது, அது மிகவும் பிரகாசமாக மாறியது, எங்களைச் சுற்றியுள்ள வீடுகளின் வடிவங்களை என்னால் தெளிவாகக் காண முடிந்தது,” என்று மியாசாகி மாகாணத்தில் வாகனம் ஓட்டிச் சென்ற நபர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
“அது பகல் வெளிச்சம் போல் தோன்றியது. ஒரு கணம், என்ன நடந்தது என்று எனக்குத் தெரியவில்லை, மிகவும் ஆச்சரியப்பட்டேன்,” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
தென்மேற்கு ஜப்பானில் உள்ள ககோஷிமா பகுதியில் உள்ள செண்டாய் விண்வெளி அருங்காட்சியகத்தின் தலைவர் தோஷிஹிசா மேடா, இது ஒரு தீப்பந்து, விதிவிலக்காக பிரகாசமான விண்கல் என்று விவரித்தார்.