இந்தியா

மணமகள்மீது துப்பாக்கிச்சூடு: சினிமா பாணியில் அரங்கேறிய கொடூரம்!

மணமேடையில் மணமகள்மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ள பயங்கர சம்பவம் இந்தியாவில் நடந்துள்ளது.

சினிமா பாணியில் அரங்கேறிய இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பிஹாரின் , பக்சார் மாவட்டத்தில் சவுசா நகரைச் சேர்ந்தவர் ஆர்த்தி குமாரி.

18 வயதான இவருக்கும், உத்தர பிரதேசத்தின் பல்லியா மாவட்டத்தை சேர்ந்த இளைஞருக்கும் நேற்று முன்தினம் மாலை திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

மணமகனும், மணமகளும் மேடையில் இருக்கும்போது, மணமேடையில் ஏறிய முகக்கவசம் அணிந்த நபரொருவர், திடீரென ஆர்த்தியை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பியோடினார்.

காயம் அடைந்த ஆர்த்தி, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

ஆர்த்தியை ஒருதலையாக காதலித்த தீன பந்து என்பவர் இச்செயலை செய்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

Dila

About Author

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே
error: Content is protected !!