பிரிக்ஸ் மோதலுக்கான அமைப்பு அல்ல : சீனா பதில்!

பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா, தென்ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளுகளை உள்ளடக்கியது பிரிக்ஸ் அமைப்பு. கடந்த வருடம் எகிப்து, எத்தியோப்பியா, ஈரான், ஐக்கிய அரபு அமீரகம், ஆகியவை இணைந்தன. இந்த வருடம் இந்தோனேசியா இணைந்துள்ளது.
பிரிக்ஸ் அமைப்பின் 17ஆவது மாநாடு நேற்றும் இன்றும் பிரேசில் நடைபெற்றது.
பிரேசில் மாநாடு நடைபெற்று கொண்டிருக்கும்போது, பிரிக்ஸ் அமைப்பை, அமெரிக்க கொள்கைக்கு எதிரானது என அழைத்த டொனால்டு டிரம்ப், பிரிக்ஸின் அமெரிக்க எதிர்ப்பு கொள்கைகளுடன் தங்களை இணைத்துக் கொள்ளும் எந்த நாடும், கூடுதல் 10 சதவீதம் வரி விதிப்பை எதிர்கொள்ளும் என மிரட்டல் விடுத்திருந்தார்.
இந்த நிலையில் பிரிக்ஸ் மோதலுக்கான அமைப்பு அல்ல. வளர்ந்து வரும் சந்தைகள், வளர்ந்து வருடம் நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்புக்கான முக்கியமான தளம். வர்த்தக போர் மற்றம் வரி விதிப்பு போர் வெற்றியார்கள் இல்லை என சீனா தெரிவித்துள்ளது.