சர்க்கரை நோயாளிகள் சாப்பிட வேண்டிய, சாப்பிடக்கூடாத காலை உணவுகள்

சமீப காலங்களில் பல வாழ்கை முறை நோய்கள் மக்களை ஆட்டிப்படைத்து வருகின்றன.
கடந்த பல ஆண்டுகளில் மக்களின் வாழ்க்கை முறை மற்றும் உணவு முறைகளில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. ஆரோக்கியமான உணவுகளின் இடத்தை துரித உணவுகளும் பதப்படுத்தப்பட்ட உணவுகளும் பிடித்துள்ளன. அதேபோல், மக்களின் உடல் செயல்பாடுகளும் குறைந்துள்ளன. இவற்றின் காரணமாக பல வித வாழ்க்கை முறை நோய்களுக்கு மக்கள் ஆளாகிறார்கள்.
மக்களை அதிக அளவில் பாதிக்கும் வாழ்க்கை முறை நோய்களில் நீரிழிவு நோய் முக்கிய இடத்தில் உள்ளது. முன்னர் பெரியவர்களிடம் மட்டுமே நீரிழிவு நோய் காணப்பட்ட நிலையில், இப்போது சிறு குழந்தைகளுக்கு கூட இது ஏற்படுகின்றது. ஒரு முறை நீரிழிவிவு நோய் வந்துவிட்டால், அதை முற்றிலுமாக குணப்படுத்த முடியாது. எனினும், அதை கண்டிப்பாக கட்டுக்குள் வைக்க முடியும்.
சர்க்கரை நோயாளிகள் தங்கள் உணவில் அதிக கவனம் எடுத்துக்கொள்ள வேண்டும். இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க, சரியான உணவை தேர்ந்தெடுத்து உட்கொள்ள வேண்டியது மிக அவசியமாகும். எந்த உணவை சாப்பிட வேண்டும் என்பது போலவே எந்த உணவை சாப்பிடக் கூடாது என்பது குறித்தும் சுகர் நோயாளிகள் மிகவும் கனவமாக இருக்க வேண்டும்.
நீரிழிவு நோயாளிகளுக்கு காலை உணவு மிகவும் முக்கியமானது. சரியான காலை உணவை உட்கொண்டால், நாள் முழுவதும் இரத்த சர்க்கரை கட்டுப்பாட்டில் இருக்கும். நீரிழிவு நோயாளிகளுக்கு தீங்கு விளைவிக்கும் சில காலை உணவுகளும் உள்ளன. இந்த உணவுகளை நீரிழிவு நோயாளிகள் காலையில் தவிர்ப்பது நல்லது.
உப்புமா
உப்புமா நீரிழிவு நோயாளிகளுக்கு நல்ல காலை உணவாக கருதப்படுவதில்லை. இதில் பல காய்கறிகள் போடப்பட்டாலும். உப்புமாவில் ரவை பயன்படுத்தப்படுகிறது. இது ஒரு சுத்திகரிக்கப்பட்ட தானியமாகும். இதில் அதிக அளவு கார்போஹைட்ரேட் உள்ளது.
பிரெட் பட்டர்
நீரிழிவு நோயாளிகள் காலை உணவாக ரொட்டி மற்றும் வெண்ணெய் சாப்பிடக்கூடாது. ரொட்டியில் அதிக அளவு கார்போஹைட்ரேட்டுகள் உள்ளன. இது இரத்த சர்க்கரையை விரைவாக அதிகரிக்கக்கூடும்.
அவல்
நீரிழிவு நோயாளிகளுக்கு அவல் உப்புமாவும் ஏற்றதாக கருதப்படுவதில்லை. அவலில் அதிக அளவு கார்போஹைட்ரேட்டுகள் உள்ளன. இவை இரத்த சர்க்கரையை விரைவாக அதிகரிக்கக்கூடும்.
முட்டை
நீரிழிவு நோயாளிகள் முட்டை சாப்பிட வேண்டும். முட்டைகள் புரதத்தின் நல்ல மூலமாகும். இது இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த உதவுகிறது.
கோதுமை ரவை
நீரிழிவு நோயாளிகள் கோதுமை ரவையில் உப்புமா அல்லது கஞ்சி செய்து சாப்பிடலாம். தலியா எனப்படும் கோதுமை ரவையில் அதிக அளவில் நார்ச்சத்து உள்ளது. இது இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த உதவுகிறது.
பழங்கள், காய்கறிகள்
நீரிழிவு நோயாளிகள் பழங்கள் மற்றும் காய்கறிகளை அதிகம் சாப்பிடலாம். இவற்றின் மூலம் உடலுக்கு தேவையான நார்ச்சத்து மற்றிம் பிற ஊட்டச்சத்துகள் கிடைக்கின்றன.
தயிர்
இவை தவிர, நீரிழிவு நோயை கட்டுப்படுத்த, நோயாளிகள் தயிரையும் உட்கொள்ள வேண்டும். தயிரில் அதிக அளவில் புரதம் மற்றும் கால்சியம் ஆகியவை உள்ளன். இவை இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைப்பதோடு ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தையும் மேன்படுத்துகின்றன.