பிரேசிலில் பொலிஸ் அதிகாரிகளுக்கு 78 ஆண்டு சிறைத் தண்டனை..
பிரேசில் நாட்டில் இரண்டு முன்னாள் பொலிஸ் அதிகாரிகளில் ஒருவருக்கு 78 ஆண்டுகளும், மற்றொருவருக்கு 59 ஆண்டுகளும் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
2018-ஆம் ஆண்டு, காரில் சென்றுகொண்டிருந்த நகர சபை உறுப்பினர் மரியேல் பிராங்கோவையும் அவரது ஓட்டுநரையும் சுட்டுக்கொன்ற வழக்கில் பிரேசில் நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை வழங்கியது.
தலைநகர் ரியோ-டி-ஜெனீரோ சுற்றுப்பகுதிகளைச் சேர்ந்த ஏழை மற்றும் கறுப்பின மக்களுக்கு வீடு உள்ளிட்ட வாழ்வாதாரத்துக்காகப் போராடி வந்த 38 வயதான மரியேல் பிராங்கோவின் மரணம், மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
நாடு முழுவதும் பெரும் வன்முறைச் சம்பவங்கள் நடந்தேறின.
(Visited 11 times, 1 visits today)