செய்தி தென் அமெரிக்கா

எலோன் மஸ்க்கின் எக்ஸ் மீதான தடையை நீக்கிய பிரேசில்

பிரேசில் நாட்டில் எக்ஸ் தளம் மீது விதிக்கப்பட்ட புதிய தணிக்கை உத்தரவுகளால், அங்குள்ள எக்ஸ் அலுவலகத்தை மொத்தமாக மூடி ஊழியர்களை அதிரடியாக நீக்கினார் எலான் மஸ்க்.

முன்னதாக அதிபர் தேர்தலின்போது முடக்கப்பட்ட எக்ஸ் தளங்கள் சட்டவிரோதமாக மீண்டும் செயல்பாட்டுக்கு வந்ததாகவும் எக்ஸ் தளம் மீது குற்றச்சாட்டு எழுந்தது.

இதுதொடர்பாக அந்நாட்டில் நடந்த உச்சநீதிமன்ற விசாரணையில் பிரேசிலில் எக்ஸ் தளத்திற்கான பிரதிநிதியை நியமிக்க உத்தரவிடப்பட்டது.

ஆனால் இதற்கு எலான் மஸ்க் மறுப்பு தெரிவித்ததால் பிரேசிலில் எக்ஸ் தளம் மொத்தமாக தடை செய்யப்பட்டது. மேலும் இந்த தடையை நீக்க வேண்டுமானால், 5.2 மில்லியன் அமெரிக்க டாலர் அபராதம் செலுத்த வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இந்நிலையில் அந்த அபாரதத் தொகையை தவறான வங்கிக்கணக்குக்கு எலான் மஸ்க் செலுத்தியதால் விவகாரம் இன்னும் சிக்கலானது.

தவறாக அனுப்பப்பட்ட தொகையை மீண்டும் எலான் மஸ்க்குக்கே அனுப்பி வைக்கும்படி பிரேசில் உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்தது.

இந்த வழக்கை விசாரித்து வந்த உச்சநீதிமன்ற நீதிபதி அலெக்ஸாண்ட்ரே டி மோரஸ், X தளம் பிரேசிலில் மீண்டும் செயல்படத் தேவையான அனைத்து தகுதிகளையும் பூர்த்தி செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

அடுத்த 24 மணி நேரத்துக்குள் எக்ஸ் சேவைகளை பிரேசில் மீட்டெடுக்க அவர் உத்தரவிட்டுள்ளார்.

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!