பிரேசில் – 56 ஆண்டுகள் பெண்ணின் வயிற்றில் இருந்த கரு… இறுதியில் பெண்ணுக்கு நேர்ந்த கதி!
பெண்கள் கருவுற்றால் பத்து மாதங்களில் குழந்தை பிறப்பதே இயற்கை. கருவுற்ற பெண்களின் கருப்பையில் சிசு படிப்படியாக வளர்ந்து பத்தாவது மாதத்தில் குழந்தையாக பிறக்கும். மருத்துவ துறையில் பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை எளிமையாகி வரும் நிலையிலும், மனித உடல் பற்றிய பல்வேறு மர்மமங்கள் இன்றும் நீடிப்பதை யாரும் மறுக்க முடியாது. அந்த வகையில், மருத்துவ துறையில் சமீபத்தில் நடைபெற்ற சம்பவம் ஒன்று அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தும் வகையில் உள்ளது.
பிரேசில் நாட்டை சேர்ந்த பெண் ஒருவர் 56 ஆண்டுகள் கருவுற்று இருந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் தனது வயிற்றில் குழந்தை உண்டாகி இருப்பது குறித்து அந்த பெண்ணுக்கே தகவல் தெரிந்திருக்கவில்லை.நீண்ட காலம் வயிற்றில் குழந்தையை சுமந்து வந்த நிலையில், பிரேசிலை சேர்ந்த டேனியலா வெரா சமீபத்தில் கடுமையான வயிற்று வலியால் அவதியுற்று வந்தார். வலி தாங்க முடியாமல் மருத்துவமனை சென்ற டேனியலாவை மருத்துவர்கள் பரிசோதித்தனர். பரிசோதனையில் டேனியலா வயிற்றில் குழந்தை இருந்தது கண்டு கண்டுபிடிக்கப்பட்டது.
உடனே விரைந்து செயல்பட்ட மருத்துவர்கள், டேனியலா வயிற்றில் கருவுற்று வளராமல் இருந்த குழந்தையை அறுவை சிகிச்சை மூலம் வெளியே எடுத்தனர். அறுவை சிகிச்சை முடிந்த மறுநாளே டேனியலா உயிரிழந்தார். அறுவை சிகிச்சைக்கு பிறகு டேனியலாவுக்கு நோய் தொற்று ஏற்பட்டதால், அவர் உயிரிழந்தார் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.
கருவுறும் பெண்களுக்கு சில சமயங்களில் கருப்பை தவிர உடலின் மற்ற இடத்தில் கரு உருவாகும் என்று மருத்துவர் பேட்ரிக் டெசிரெம் தெரிவித்தார். இதுபோன்ற நிலையை “எக்டோபிக் கருவுறுதல்” (ectopic pregnancy) என்று மருத்துவ துறையில் குறிப்பிடுகின்றனர். இது போன்ற நிலை தான் டேனியலாவுக்கும் ஏற்பட்டது.
இந்த சூழலில் குழந்தை சரியாக வளர முடியாது என்பதால் அது பெண்ணின் உடலில் கால்சியமேற்றம் (கரு கால்ஷியமாக மாறிவிடுதல்) ஆகி விடும். இந்த நிலையில், பெண்களின் வயிற்றில் சிசு இருப்பது தொடர்பான அறிகுறிகள் எதுவும் தென்படாது. மேலும் வலியும் ஏற்படாது. எக்ஸ்-ரே செய்யாமல் இந்த நிலையை கண்டறியவே முடியாது.