Tamil News

கருவில் இருக்கும் ஒரு குழந்தைக்கு மூளையில் அறுவை சிகிச்சை; அமெரிக்க மருத்துவர்கள் சாதனை !

அமெரிக்காவில் கருவில் இருக்கும் ஒரு குழந்தைக்கு மூளையில் அறுவை சிகிச்சை செய்து அமெரிக்க மருத்துவர்கள் சாதனை படைத்து உள்ளனர்.

அமெரிக்காவில் பெண் ஒருவருக்கு கரு உருவாகி 34 வாரங்கள் ஆன நிலையில் அந்த பெண் பாஸ்டன் குழந்தைகள் மருத்துவ மனைக்கு பரிசோதனைக்காக சென்றார்.அங்கு குழந்தையின் வளர்ச்சி எப்படி உள்ளது என்பதை அறிய டாக்டர்கள் பரிசோதனை செய்து பார்த்தனர்.

அப்போது மூளையில் இருந்து இதயத்துக்கு இரத்தத்தை எடுத்து செல்லும் இரத்த நாளம் சரியாக வளர்ச்சி அடையாமல் இருந்தது தெரிய வந்தது. இது வீனஸ் ஆப் கேலன் என்ற குறைபாடாகும்.இந்த குறைபாட்டினால் இரத்த ஓட்டத்தை மெதுவாக்கும். இரத்தம் நுண் குழாய்களுடன் நேரடியாக இணைவதற்கு பதிலாக நேரடியாக நரம்புகளுடன் இணையும்.இதன் காரணமாக நரம்புகளுக்குள் அதிக இரத்த அழுத்தத்தை உருவாக்கும். நரம்புகளில் இந்த கூடுதல் இரத்த அழுத்தம் ஏற்படும் போது பல பிரச்சினைகள் உருவாகும்.

Doctors perform first-ever brain surgery on baby in womb

அதோடு இதயம் செயல் இழப்பு மற்றும் மூளை பாதிப்பு ஏற்பட்டு உயிர் இழக்கும் அபாயமும் உள்ளது. மிகவும் அரிய வகை நோயான இந்த குறைபாட்டை அறுவை சிகிச்சை மூலம் சரிசெய்ய டேரன் ஆர்பாக் தலைமையிலான டாக்டர் குழுவினர் முடிவு செய்தனர்.அந்த குழந்தையை கருவிலேயே காப்பாற்ற டாக்டர்கள் நடவடிக்கை எடுத்தனர். மிகவும் சவாலான இந்த மூளை அறுவை சிகிச்சையினை டாக்டர் குழுவினர் ஒரு ஊசி மூலம் வெற்றிகரமாக நடத்தினார்கள்.

தற்போது அந்த குழந்தையின் இரத்த நாளம் சரி செய்யப்பட்டதால் உயிருக்கு இனி ஆபத்து இல்லை என மருத்துவர்கள் தெரிவித்த நிலையில் தாயார் நேற்றையதினம் குழந்தையை பிரசவித்துள்ளார்.இந்நிலையில் குழந்தையின் பெற்றோர்கள் மிகவும் மகிழ்ச்சியில் உள்ளனர். ஏற்கனவே குறித்த தம்பதிகளுக்கு இரு குழந்தைகள் உள்ள நிலையில் , இக்குழந்தை மூன்றாவது குழந்தையாகும்.

அதேசமயம் உலகில் முதல் முறையாக இந்த அறுவை சிகிச்சை அமெரிக்க டாக்டர் குழுவினர் செய்து சாதனை படைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version