ஐரோப்பா

பிரான்ஸில் குளியல் தொட்டியில் கண்டுபிடிக்கப்பட்ட சிறுவனின் சடலம் – தாயார் மீது சந்தேகம்

பிரான்ஸில் குளியல் தொட்டியில் இறந்து கிடந்ததாக தெரிவிக்கப்படும் ஐந்து வயது சிறுவன் ஒருவனது சடலம் பொலிஸாரால் மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் சிறுவனின் தாயார் சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் Annecy நகரில் கடந்த ஓகஸ்ட் 16 ஆம் திகதி புதன்கிழமை இடம்பெற்றுள்ளது. அங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பின் வீடொன்றில் வசிக்கும் ஐந்து வயதுச் சிறுவனது சடலமே மீட்கப்பட்டுள்ளது.

சிறுவன் காயங்களுக்கு இலக்காகி உயிரிழந்ததாக உடற்கூறு பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது. சந்தேகத்துக்கிடமான நபராக சிறுவனின் தாயார் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேற்படி சம்பவத்தில் தனக்கு எதுவும் தெரியாது என தெரிவித்த அப்பெண், அந்நியர்கள் வீட்டுக்குள் நுழைந்து தமது மகனைத் தாக்கியதாக குற்றம் சாட்டினார்.

ஆனால் மேற்படி குற்றச்சாட்டுக்குரிய ஆதாரங்கள் எதுவும் கிடைக்கவில்லை என்பதை அடுத்து, அப்பெண் தொடர்ந்தும் கட்டுப்பாட்டுக்குள் வைக்கப்பட்டுள்ளார்.

(Visited 7 times, 1 visits today)

SR

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்