அமெரிக்காவில் பொலிஸாரின் துப்பாக்கிபிரயோகத்தில் சிறுவன் உயிரிழப்பு!

அமெரிக்காவில் நியூயார்க் மாநில காவல்துறை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 வயது குழந்தை உயிரிழந்துள்ளது.
பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் குழந்தையின் கையில் துப்பாக்கி இருப்பதாக நினைத்து அவரை சுட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். ஆனால் அது ஒரு பொம்மை துப்பாக்கி எனத் தெரிவிக்கப்படுகிறது.
உட்டிகா பகுதியில் கடந்த சில நாட்களாக திருட்டு சம்பவங்கள் நடப்பதாக முறைப்பாடுகள் வந்ததாகவும், இதன் காரணமாக போலீசார் குவிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
Nyah Mway என்ற குழந்தை தனது தோழியுடன் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த போது, அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி விசாரித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து குறிந்த குழந்தையும் ஒரு பொலிஸ் அதிகாரியும் தரையில் சண்டையிட்டனர். இதில் மற்றைய அதிகாரி துப்பாக்கி சூடு நடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.
(Visited 11 times, 1 visits today)