வவுனியாவில் குடைசாய்ந்த உழவு இயந்திரம் – சிறுவன் பலி!

வவுனியா – பூவரசங்குளம், மடுக்குளம் பகுதியில் உழவு இயந்திரம் குடைசாய்ந்ததில் சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்று (01) மாலை மடுக்குளம் பகுதியில் உள்ள குளத்தின் அணைக்கட்டில் மண் ஏற்றிச்சென்ற உழவு இயந்திரம் கட்டுப்பாட்டை இழந்து, குடைசாய்ந்து விபத்திற்குள்ளாகியது.
இதன்போது, உழவு இயந்திரத்தின் பின் பகுதியில் ஐந்து பேர் பயணித்த நிலையில், இரண்டு சிறுவர்கள் படுகாயமடைந்து பூவரசங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதில் 15 வயதான சிறுவன் மேலதிக சிகிச்சைகளுக்காக வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போது உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் காயமடைந்த மற்றைய சிறுவன் தொடர்ந்தும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பூவரசங்குளம் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
(Visited 12 times, 1 visits today)