புத்தளத்தில் கடலில் மிதந்து வந்த போத்தல் – பறிபோன உயிர்கள்!
புத்தளத்தில் கடலில் மிதந்து வந்த போத்தலில் இருந்த பானத்தை அருந்திய இருவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நொரோச்சோலை பகுதியில் உள்ள ஒரு மீன்பிடி குடிலில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதன்போது நால்வர் சம்பவ இடத்தில் இருந்ததாகவும் அதில் இருவர் உயிரிழந்த நிலையில் இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
மருத்துவமனையில் ஒருவர் இறந்ததைத் தொடர்ந்து, காவல்துறையினர் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
இதன்புாது மீன்பிடி குடிலில் இருந்து மற்றொரு நபரின் சடலத்தை மீட்டுள்ளனர்.
சம்பவம் குறித்து மேலும் விசாரணைகள் நடந்து வருகின்றன.
(Visited 2 times, 3 visits today)





